உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த 11 மாத குழந்தை இறந்துவிட்டது: பெற்றோர் உருக்கம்
பிரித்தானியாவில் தங்களது 11 மாத குழந்தை Charlie இறந்துவிட்டதாக குழந்தையின் பெற்றோர் அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bedfont பகுதியைச் சேர்ந்த தம்பதி Chris Gard(32)- Connie Yates(31).
இவர்களுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்துள்ளது, குழந்தைக்கு Charlie என பெயரிட்டனர்.
பிறக்கும் போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்த Charlie-க்கு மூளை சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து குழந்தைக்கு லண்டனில் உள்ள Great Ormond Street மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் உடல்நலத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்ல முடிவு செய்து மாவட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஆனால் மருத்துவமனை சார்பில், Charlie-க்கு அமெரிக்காவில் Experimental Nucleoside Therapy மேற்கொள்ள பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும், இதனால் எவ்வித பலனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கில் பெற்றோருக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் உச்சநீதிமன்றம், அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக Charlie-ன் பெற்றோர் போராடிய நிலையில், குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான காலம் கடந்துவிட்டதாக அமெரிக்க நரம்பியல் நிபுணர் பேராசிரியர் Michio Hirano தெரிவித்திருந்தார்.இதனைதொடர்ந்து குழந்தைக்கு அளிக்கப்பட்ட உயிர்காக்கும் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர்.
பிரதமர் தெரேசா மே, போப் ஆண்டவர் உட்பட பலரும் குழந்தையின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
எங்கள் அழகிய குழந்தை இறந்துவிட்டான், அவனை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று உருக்கமாக கூறியுள்ளனர் Charlie-ன் பெற்றோர்.
உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த 11 மாத குழந்தை இறந்துவிட்டது: பெற்றோர் உருக்கம்
Reviewed by NEWMANNAR
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment