சங்ககாரா அடித்த மெகா சிக்சர்: துண்டாக உடைந்த ரசிகரின் செல்போன்...
Middlesex உள்ளூர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சங்ககாரா அடித்த மெகா சிக்சரால் ரசிகரின் செல்போன் உடைந்து போன காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
NatWest டி20 உள்ளூர் அணிகளுக்கான போட்டிகள் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதன் நேற்றைய போட்டியில் Surrey அணியும் Middlesex அணியும் மோதின.
முதலில் விளையாடிய Surrey அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 158 ஓட்டங்களை குவித்தது. அந்த அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா 42 பந்துகளில் 70 ஓட்டங்களை குவித்தார்.
சங்ககாரா பேட்டிங் செய்யும் போது மெகா சிக்சரை தூக்கியடித்தார், பந்தானது பார்வையாளர்கள் உட்கார்ந்திருந்த வரிசையை நோக்கி சென்றது.
அங்கு உட்கார்ந்திருந்த ரசிகர் ஒருவர் கையில் செல்போனை வைத்து கொண்டு தன்னை நோக்கி வந்த பந்தை பிடிக்க முயன்றார்.
அப்போது, அவர் கையிலிருந்த செல்போனை பந்து பதம் பார்த்தது. இதில் செல்போன் துண்டாக உடைந்தது.
ரசிகருக்கு எந்த அடியும் ஏற்படவில்லை, உடைந்த செல்போனை சிரித்து கொண்டே ரசிகர் காண்பித்தார். இது சம்மந்தமான வீடியோ வைரலாகியுள்ளது.
சங்ககாரா அடித்த மெகா சிக்சர்: துண்டாக உடைந்த ரசிகரின் செல்போன்...
Reviewed by Author
on
July 15, 2017
Rating:

No comments:
Post a Comment