உலகை வியக்க வைத்த தமிழன்!
ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில் தனக்கு என்ற ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு முத்தான இமாலய சாதனை படைத்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நாள் இன்று ஆகும்.
அத்துடன், டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக 800 விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரர் என்ற அபூர்வ சாதனை படைக்கப்பட்ட நாள்.
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் பல சாதனைகளை படைத்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமே.
அந்த வகையில் டெஸ்ட் கிரிகெட் போட்டியில் முதல் ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களின் பட்டியலில் முரளிதரன் தனக்கென்று ஒரு தனி இடம் வகித்துள்ளார்.
டெஸ்ட் கிரிகெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி இவ்வாறான ஒரு துடுப்பாட்ட சாதனையையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
1992ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தனது டெஸ்ட் வாழ்வில் காலடி வைத்தார். 18 வருட காலமாக இலங்கை அணியில் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அத்துடன், 230 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 22.72 என்ற பந்துவீச்சு சராசரியில் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற அபூர்வ சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது புறங்கையால் ஓஜாவின் விக்கெட்டைக் கைப்பற்றியதே அவரது கடைசி மற்றும் 800 ஆவது விக்கெட்.
இன்னிங்ஸ் ஒன்றில் 4 விக்கெட்டுகளை 47 தடவைகளும், 5 விக்கெட்டுகளை 67 தடவைகளும் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளை 22 தடவைகளும் கைப்பற்றி வரலாற்று சாதனையை பெற்றுள்ளார்.
இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்றுள்ள நிலையில் பகல் போசன இடைவேளையின் போது காலி விளையாட்டரங்கிற்கு (2010ம் ஆண்டில்) சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முத்தையா முரளிதரனுக்கு விசேட விருது ஒன்றை வழங்கி கௌரவித்தார்.
இவ்வாறு பல சாதனைகளை பெற்று தன் நாட்டிற்கு பெருமை சேர்த்து உலகை வியக்க வைத்த தமிழன் என்ற பெயரையும் முத்தையா முரளிதரன் பெற்றுக்கொண்டுள்ளார்.

உலகை வியக்க வைத்த தமிழன்!
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment