பல தசாப்தங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மீன்!
முதன் முறையாக 130 வருடங்களுக்கு பின்னர் சன்பிஸ் (Sunfish) எனப்படும் புதிய இன மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன் இனமானது நீண்டகாலமாக உயிரின வகைப்படுத்தலில் இருந்து நழுவி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hoodwinker Sunfish (Mola tecta) என பெயரிடப்பட்ட நிலையில் நியூசிலாந்து, சிலியின் தென் பகுதி, தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதி என்பவற்றில் காணப்பட்டது.
அதன் பின்னர் பல வருடங்களுக்கு பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மூன்று மீற்றர்கள் வரை வளரக்கூடியதாக இருப்பதுடன் சுமார் இரண்டு தொன் எடைகள் வரை கொண்டிருக்கும்.
பத்து வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சிலர் சன்பிஸ் வகைக்குரிய சில மரபணுக்களை அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இருந்து சேகரித்திருந்தனர்.
எனினும் அவர்களால் சன்பிஸ் வாழ்வது தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை.
பல தசாப்தங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மீன்!
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment