மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலய அதிபர், ஆசிரியர்களுடன் முக்கிய கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலய அதிபர், ஆசிரியர்களுடனான முக்கிய கலந்துரையாடலொன்று நாளை புதன்கிழமை(19) ஆண்டாங்குளம் றோ.க. பாடசாலைக்கு அருகிலுள்ள ஆண்டாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் பிற்பகல்-02 மணி முதல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
வடமாகாணத்தின் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ள இந்தக் கலந்துரையாடலில் அதிபர்கள், ஆசிரியர்களின் பதவியுயர்வுகள், புதிய சம்பள மாற்றங்கள், இடமாற்றங்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
மடு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைய முடியுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மடு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைய முடியுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலய அதிபர், ஆசிரியர்களுடன் முக்கிய கலந்துரையாடல்
Reviewed by Author
on
July 18, 2017
Rating:

No comments:
Post a Comment