மக்களை ஏமாற்றி தேர்தலில் வெல்வோம் தமிழரசுக் கட்சிக் கலந்துரையாடலில் உண்மையை உளறிய கனகசபாபதி; ஓடிச் சென்று வாயடைத்தார் சுமந்திரன்
தேர்தல் காலத்தில் நாங்கள் மேடையில் பேசும் பேச்சு வேறு, அது தேர்தலில் வெல்வதற்காக பேசுகின்றோம், ஆனால் பின்னர் நடைமுறை என வரும் போது நாங்கள் பேசும் பேச்சு மற்றும் செயற்பாடு என்பன வேறு என தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனக சபாபதி உண்மையை உளறியுள்ளார்.
வடக்கு மாகாண சபை தொடர்பாக அண்மையில் தமிழரசுக் கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்.வீரசிங்கம் மண்ட
பத்தில் நேற்று நடைபெற்றது.
நேற்றைய தினம் காலை 10 மணி தொடக்கம் மேற்படி கலந்துரையாடல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் ஆரம்பமாகியது.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.சரவணபவன் மற்றும் வட மாகாண அவைத் தவைர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் தமிழ ரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் பங்கேற்க வந்திரு ந்தவர்கள் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட உறுப்பினர்கள் மட்டும் அழைப்பிதழ் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கலந்துரையாடப்பட்ட ஒருபகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி பேசும் போது,
தேர்தல் காலங்களில் மேடையில் நின்று நாம் பேசும் பேச்சு வேறு, அது தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகப் பேசும் பேச்சு. ஆனால் பின்னர் நிர்வாகம் என்று வரும் போது நாங்கள் பேசும் பேச்சு நடக்கிற நடை வேறு. என்று உண்மையை உளறினார்.
இதன்போது திகைப்படைந்த சுமந்திரன் உடனே எழுந்து சென்று அவரின் காதில் எச்சரித்துப் பேச்சை மாற்றினார்.
மேலும் தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தன்னைப் பொதுமக்கள் தாக்க வருவதாகவும் விசேட அதிரடிப்படையின் உதவியை நாடவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
மேற்படி கலந்துரையாடலில் இளைஞர்கள் பல கேள்விகளை கேட்க முற்பட்ட போதும் சரிவர சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் தாம் கூறியபடி நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் வலம்புரியிடம் தெரிவித்திருந்தார்.
வலம்புரி
மக்களை ஏமாற்றி தேர்தலில் வெல்வோம் தமிழரசுக் கட்சிக் கலந்துரையாடலில் உண்மையை உளறிய கனகசபாபதி; ஓடிச் சென்று வாயடைத்தார் சுமந்திரன்
Reviewed by NEWMANNAR
on
July 03, 2017
Rating:

No comments:
Post a Comment