அண்மைய செய்திகள்

recent
-

தாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது - ரவிகரன் !

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் காடுகளை அளித்து அப் பகுதியில் புதிய முஸ்லீம் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவரும் நிலையில் அதற்க்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பி வருகின்றது.இந்த நிலையில் இந்த காடழிப்பு தொடர்பில் வடக்கு மாகானசபை உறுப்பினர் ரவிகரன் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் தற்போது குடியேற்றம் நடைபெறவுள்ள பகுதி ஏற்க்கனவே விடுதலைப்புலிகளால் மிகவும் நேர்த்தியாக உருவாக்கபட்டு வளர்க்கப்பட்டுவரும் மரங்கள் உள்ள பகுதி இது எப்போதும் இந்த மாவட்ட மக்களுக்கு உரித்தான வனங்களாகும். தமிழ் மக்களுக்கு முல்லைத்தீவில் காணிகள் இல்லாத நிலையில் முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் விசேடமாக ஒரு செயலணியை உருவாக்கி காணிகளை வழங்குவதர்க்கான முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

ஏற்கனவே முல்லைத்தீவில் முறிப்பு பகுதியில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட வனங்களை அளித்து பாரிய குடியேற்றம் ஒன்றை எந்தவித அனுமதிகளுமின்றி அமைத்துள்ளதை பலமுறை நாம் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தும் எந்த பலனுமில்லை இது தொடர்பில் இங்குள்ள அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாதாம். தமிழ் மக்கள் ஒரு சிறிய தடியை வெட்டினால் கூட சட்டம் பாய்கின்றது .ஆனால் முறிப்பில் எந்தவித அனுமதிக்களுமின்றி 400 ஏக்கர் காணிகளை அழித்ததை எல்லோரும் வேடிக்கை பாத்தார்கள்.

எனவே முல்லைத்தீவில் இதுவரையில் கடுமையான வரட்சி நிலவுகின்றது தொடர்ந்தும் வரட்சி சூழல் நிலவ மீண்டும் வனங்களை அழித்து குடியேற்றம் மேற்கொள்வதை அனுமதிக்கமுடியாது. இன்று இந்த குடியேறத்துக்கு எதிராக இளைஞர்கள் திரண்டுள்ளார்கள்.அவர்களுடன் நானும் இன்று இணைவேன் இந்த காடழித்து மேற்கொள்ளப்படும் குடியேறத்துக்கு எதிராக குரல் கொடுப்பேன் .

எனவே தாம் நினைத்த மாதிரி முல்லைத்தீவை மாற்றலாம் என யாரும் இங்கே அதிகாரம் செலுத்த முடியாது என்பதை உறுதியாக் சொல்லிவைக்கின்றேன் . என்று தெரிவித்துள்ளார்.
தாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது - ரவிகரன் ! Reviewed by NEWMANNAR on July 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.