முஸ்லிம் சகோதரர்கள், நண்பர்கள், முற்போக்கு சக்திகளின் கவனத்துக்கு…
சிங்கள பேரினவாத அரசு புத்தபிக்குகளை வைத்து கிழக்கில் முஸ்லிம், தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் முயற்சிக்கப்பட்டது. தமிழ், முஸ்லிம் மக்களின் விழிப்புணர்வு, எதிர்ப்பு காரணமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று முல்லைத் தீவில், தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் உள்ள காடுகளை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதனை சாமான்ய தமிழ் மக்கள் யாரும் ஏற்கப்போறது இல்லை.
தமிழ் மக்கள் கோபம் கொள்வார்கள். பயம் கொள்வார்கள். ஆத்திரம் அடைவார்கள். பொங்கி எழுவார்கள்.
இது யதார்த்தம். இந்த நாட்டில் எந்த இனமும் அப்படித்தான் நடந்து கொள்ளும்.
பலாத்காரமான குடியேற்றங்களுக்கூடாக மக்களுக்கு கூடிவாழ்தல், பல்லினப் பண்பாடு, ஜனநாயகம், நிலவுரிமைகள் பற்றி பாடம் எடுக்க முடியாது.
நிலம் பற்றிய பிரச்சினை வரும் போது இங்கு அனைத்து இனங்களும் “கொதிநிலை” இல் நின்றபடியே விடயங்களை அணுகுவர். மக்களுக்கு அப்படித்தான் முடியும். ஏனெனில் நாம் அந்த அளவுக்குத்தான் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம்.
அந்த வகையில் அரசியல்வாதி ரிஷாத் அவர்கள் மேற்கொள்ளும் இந்த குடியேற்ற நாடகம் திட்டவட்டமாக தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நிட்சயமாக பகைமையையும் சிலவேளை மோதல்களையும் ஏற்படுத்தவே போகின்றது.
ரிசாத் அவர்கள் இந்த குடியேற்ற நாடகத்தை மேற்கொள்வது அவருடைய தேர்தல் அரசியல் என்னும் “அற்ப நோக்கத்தை” அடிப்படையாகக் கொண்டதாயினும்…
சிங்கள பேரினவாத அரசு “தன் அடுத்தகட்ட நகர்வுக்கான நீண்டகால திட்டத்திலேயே” அவருக்கு இந்த அனுமதியை வழங்கி உள்ளது.
அந்த அடுத்தகட்ட நகர்வு யாதெனில்,
“கிழக்கில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றும் முயற்சியை சுமூகமாக நடைமுறைப்படுத்துவது ஆகும் ”
ஏன் “சுமூகமாக” எனச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்.
இந்த குடிப்பரம்பல் மிஷனை நிறைவேற்றிய பின்னரே நீங்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “புதிய அரசியல் யாப்பு” உருவாக்கப்படும்
அந்த “புதிய அரசியல் யாப்பில்” வைக்கப்படும் பெரிய ஆப்பு – தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும்!
சிங்கள பேரினவாதத்தினதும், இந்திய மேலாதிக்கத்தினதும், மேற்கத்தைய ஏகாதிபத்தியங்களினதும் நலன்களை பேணும் வகையில் தமிழரும் முஸ்லிம்களும் ஒருவரோடுருவர் முட்டி மோதி சிங்களத்தோடு அண்டிப் பிழைத்து எம் பிள்ளை குட்டிகளை பெருக்குவோமாக.
இதுக்குதான் ஆசைப்படுகிறோமா?
ஞானதாஸ் காசிநாதர்

Reviewed by NEWMANNAR
on
July 16, 2017
Rating:

No comments:
Post a Comment