தலைமன்னாருக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்....
கொழும்பு - கோட்டைக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத பாதையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தபடவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 17ம் திகதி முதல் அந்த பாதையில் புகையிரத சேவைகள் மதவாச்சி வரை மாத்திரமே நடத்தப்படும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மதவாச்சி மற்றும் செட்டிக்குளம் இடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதனால் எதிர்வரும் 17ம் திகதி முதல் 23ம் திகதி வரை தலைமன்னாருக்கு புகையிரத போக்குவரத்து நடத்தப்பட மாட்டாது.
இதனடிப்படையில், கொழும்பு கோட்டையில் இருந்து மதவாச்சி வரை மட்டுமே புகையிரத சேவைகள் நடத்தப்பட உள்ளன.
மக்களின் வசதிக்காக மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரை இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தலைமன்னாருக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்....
Reviewed by Author
on
July 16, 2017
Rating:

No comments:
Post a Comment