மன்னாரில் இன்று தனியார் பேரூந்துகள் பணி பகிஸ்கரிப்பு-----யாழ் நீதிபதிக்கு ஆதரவாக....
யாழ்ப்பாணத்தில் மா.இளஞ்செழியன் நீதிபதி அவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினை கண்டித்து வடமாகாண தனியார் பேரூந்துகளின் ஒன்றியம் வடமாகாணம் பூராகவும் இன்று 24-07-2017 முழுவதுமான பணிபகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் மேற்கொண்டுள்ளனர்.
- ஒரு நீதிபதிக்கே இந்த நிலை.... என்றால் மக்களின் நிலை என்ன....
- நல்லாச்சி அரசாங்கத்தில் இவ்வாறு நிகழ்வது நல்லவிடையமாகவா இருக்கின்றது.....
- இந்த துப்பாக்கி பிரயோகமானது இலங்கையின் நீதித்துறைக்கே விடப்பட்ட ஒரு சவால்.......
பேரூந்துகள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மன்னாரில் இன்று தனியார் பேரூந்து தரிப்பிடம் வெறிச்சோடிக்கிடப்பதையும் மக்கள் தமது பயணத்தினை மேற்கொள்ள மிகவும் சிரமப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
மன்னாரில் இன்று தனியார் பேரூந்துகள் பணி பகிஸ்கரிப்பு-----யாழ் நீதிபதிக்கு ஆதரவாக....
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment