அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பதவி நீக்கிவிட்டு ச.தொ.ச. விவகாரத்தை விசாரணை செய்யுங்கள்
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டிருக்கின்றன என்றால் அதன் பின்புலத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தி உள்ளது என்பதே வெளிப்படையாகின்றது. எனவே அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பதவி விலக்கிவிட்டு ச.தொ.ச. நிறுவனத்திற்கு சீனி ஏற்றிச் சென்ற வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்துங்கள் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் ராஜகிரிய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலிருந்து பெருந்தொகை போதைப்பொருள் மீட்கப்படுவதென்பது பாராதூரமான விடயமாகும். அதனால் இந்த விடயத்தை மறைத்துவிடாமல் இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இன்று எமது நாடு போதைப்பொருளை மற்றைய நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு மத்தியஸ்தானமாக மாறியுள்ளது. குறிப்பாக சிலாபத்துறை, மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து கடல்மார்க்கமாகவே இந்த போதைப் பொருள் நாட்டின் உள்ளே வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக் கூடும் என்பதாலேயே வில்பத்து வனத்தை அழித்து அங்கு குடியிருப்புக்களை அமைக்க அனுமதிக்க வேண்டாம் என்று எமது அமைப்புக்கள் கூறியிருந்தன. இன்று பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இந்த குடியிருப்புக்களை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆயுதக்கடத்தல்களும் கூட இடம்பெறலாம் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
மேலும் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுக்கு என்ன ஆனது என் றும் அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடைய அமைச்சின் கீழ் ச.தொ.ச. நிறுவனம் இருக்கும் வரையில் இந்த விசாரணைகள் நியாயமாக இடம்பெறாது. எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதனை விடுத்து பிரேசிலிருந்து சீனி இறக்குமதி செய்வதை நிறுத்த வேண் டும் என்பது வேடிக்கையாகவுள்ளது. எனவே பிரேசிலிருந்து சீனி இறக்கு மதி செய்வதை தடுக்காமல் போதைப் பொருள் இறக் குமதி செய்யப்படுவதையே தடுக்க வேண்டும் என்றார்.
பொதுபலசேனா அமைப்பின் ராஜகிரிய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலிருந்து பெருந்தொகை போதைப்பொருள் மீட்கப்படுவதென்பது பாராதூரமான விடயமாகும். அதனால் இந்த விடயத்தை மறைத்துவிடாமல் இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இன்று எமது நாடு போதைப்பொருளை மற்றைய நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு மத்தியஸ்தானமாக மாறியுள்ளது. குறிப்பாக சிலாபத்துறை, மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து கடல்மார்க்கமாகவே இந்த போதைப் பொருள் நாட்டின் உள்ளே வருகின்றன.

மேலும் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுக்கு என்ன ஆனது என் றும் அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடைய அமைச்சின் கீழ் ச.தொ.ச. நிறுவனம் இருக்கும் வரையில் இந்த விசாரணைகள் நியாயமாக இடம்பெறாது. எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதனை விடுத்து பிரேசிலிருந்து சீனி இறக்குமதி செய்வதை நிறுத்த வேண் டும் என்பது வேடிக்கையாகவுள்ளது. எனவே பிரேசிலிருந்து சீனி இறக்கு மதி செய்வதை தடுக்காமல் போதைப் பொருள் இறக் குமதி செய்யப்படுவதையே தடுக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பதவி நீக்கிவிட்டு ச.தொ.ச. விவகாரத்தை விசாரணை செய்யுங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2017
Rating:

No comments:
Post a Comment