தலைமைக்கோ, கூட்டமைப்பிற்கோ எதிரானவன் அல்ல! ஆனால் பெரிய பிரச்சினை இதுதான்: சீ.வி விளக்கம்...
“நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ எதிரானவன் அல்ல” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கூட்டமைப்பிற்கும் எனக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்படுவதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர் என கூறியுள்ளார்.
மேலும், தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ எதிரானவன் அல்ல, ஆனால் அவர்கள் இங்கு ஒன்றையும் கொழும்பில் வேறு ஒன்றையும் கூறுகின்றனர். இதுவே எனக்கு பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமைக்கோ, கூட்டமைப்பிற்கோ எதிரானவன் அல்ல! ஆனால் பெரிய பிரச்சினை இதுதான்: சீ.வி விளக்கம்...
Reviewed by Author
on
July 03, 2017
Rating:

No comments:
Post a Comment