மன்னார் யதீஸ் தொண்டு நிறுவனமும் தேசிய சேமிப்பு வங்கியும் இணைந்து இலவச கருத்தரங்கு....
தேசிய சேமிப்பு வங்கியின் மன்னார் கிளையினால் வருடா வருடம்
தரம் - 5 இற்குரிய இலவச கருத்தரங்கு இவ்வருடம்.மன்னார் மாவட்ட யதீஸ் மணவர் தொண்டு நிறுவனத்தின் பரிந்துரையின் ஏற்பாட்டில்
மடு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் மரியாதைக்குரிய திருமதி.L. மாலினி வெனிற்றன் பூரண அனுமதியுடன் மடு கல்வி வலயத்தின்
மன்/ அடம்பன் M.M.V பாடசாலையில் கல்லூரி முதல்வர் திரு.S.F. சேவியர் ( பரஞ்சோதி ) அவர்களின் ஒழுங்கமைப்பில்
23/7/2017 ஞாயிற்று கிழமை காலை 8.30 தொடக்கம் மாலை 5.00 மணி வரை
யாழ் மாவட்ட தென்மராட்சி ஆசிரிய ஆலோசகர் ISA சி.சிவதாசன் தலைமயில்
யாழ் மாவட்ட ஆசிரியர்களான
திரு ப. சந்திரமோகன்
திருமதி சி.சுதாஜினி ஆகிய மூன்று வளவாளர்களினால் சோக்கு , மாக்கர் எதுவும் பயன்படுத்தாமல் நவீன கற்பித்தல் சாதனமான " மல்ரி மீடியா " என்பதை பயன்படுத்தி கற்பித்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்கில் மாந்தை கோட்டத்திற்குரிய 350 மாணவர்கள் கலந்து பயன் பெற்றார்கள் அத்துடன் மடுக் கோட்டத்திற்குரிய 200 மாணவர்களுக்கான தனியான கருத்தரங்கு 6/8/2017 ஞாயிற்றுகிழமை நடைபெறும் நகரத்தில் அதிக எண்ணிக்கையான மாணவர்களை வருவித்து வருடா வருடம் நடைபெறுவதை தவிர்த்து இம்முறை மணவர்களை கோட்டமாக பிரித்து நடைபெற்றதனால் வருகைதந்து கலந்து கொண்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பயன் நிறைந்த கருத்தரங்கு என ஒழுங்கு செய்த அனைவரையும் பாராட்டி சென்றார்கள்.மை கவனத்தில் கொள்ளத்தக்கது இவ்வாறான கல்விசார் செயட்பாடுகளை முன்னின்று செயலாற்றி வரும் யதீஸ் தொண்டு நிறுவனத்துக்கும் தேசிய வங்கி மன்னார் கிளைக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
மன்னார் மாணவ மணவிகளின் கல்வி வளர்ச்சியே மன்னார் மண்ணின் எழுச்சி
மன்னார் யதீஸ் தொண்டு நிறுவனமும் தேசிய சேமிப்பு வங்கியும் இணைந்து இலவச கருத்தரங்கு....
Reviewed by Author
on
July 30, 2017
Rating:

No comments:
Post a Comment