மன்னாரில் இளைஞர்கள் கொடிதினம் ஆரம்பம்......(photoes)
மன்னார் மாவட்ட இளைஞர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் கொடிதினமானது வன்னி மாகாணத்தின் இளைஞர்கள் சேவைகள் பணிப்பாளர் M.M.முனோவர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதல் கொடியினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் M.Y.S. தேசப்பிரிய அவர்களும் அதனைத்தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் திருமதி,ஸ்ரான்லி டிமெல் அவர்களும் மாவட்ட செயலத்தினதும் பிரசேச செயலகத்தினதும் அரச உத்தியோகத்தர்கள் கொடிகளைப்பெற்றுக்கொண்டனர்,
இலங்கை பூராகவும் உள்ள இளைஞர்கள் சம்மேளனத்தின் மூலம் பெறப்படுகின்ற நிதியானது. அவர்களின் ஆற்றல் ஆளுமையினை வளர்த்துக்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் . அதன்படியே இன்று மன்னாரிலும் கொடிதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இளைஞர்கள் கொடிதினம் ஆரம்பம்......(photoes)
Reviewed by Author
on
July 27, 2017
Rating:

No comments:
Post a Comment