உலக தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை முதலிடம்...
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் டைவ் அடித்து இலக்கை கடந்தார்.
ஐவரிகோஸ்ட் வீராங்கனை மேரி ஜோசி தா லு 10.86 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், நெதர்லாந்து வீராங்கனை டாபைன் ஸ்சிப்பெர்ஸ் 10.96 வினாடியில் இலக்கை கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர். போல்வால்ட் பந்தயத்தில் கிரீஸ் வீராங்கனை எகாட்ரினி ஸ்டீபானிட் 4.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், அமெரிக்க வீராங்கனை சான்டி மொரிஸ் 4.75 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், வெனிசுலா வீராங்கனை ராபில்ஸ் பெனின்டோ 4.65 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் நியூசிலாந்து வீரர் தாமஸ் வால்ஷ் 22.03 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜோ கோவாச் 21.66 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், குரோஷியா வீரர் ஸ்டிப் சுனிச் 21.46 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
உலக தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை முதலிடம்...
Reviewed by Author
on
August 08, 2017
Rating:

No comments:
Post a Comment