ஒவ்வொரு எழுத்துக்கும் 15,000 டொலர் வெகுமதி: சீனா அருங்காட்சியகம் அழைப்பு
பழங்கால சீனா மொழியை வாசிக்க தெரிந்தவர்களுக்கு அங்குள்ள அருங்காட்சியகம் ஒன்று ஒவ்வொரு எழுத்துக்கும் 15,000 டொலர் வெகுமதி அளிக்க முன்வந்துள்ளது.
சீனாவின் தேசிய அருங்காட்சியகமனாது அரிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அங்குள்ள பழங்கால சுவடி ஒன்றை வாசித்து பொருள் விளக்குபவர்களுக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் 15,000 டொலர் வெகுமதி வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த சுவடியானது 3000 ஆண்டுகள் பழமையானது எனவும் ஷாங் வம்ச காலத்தில் எழுதப்பட்டது எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி குறிப்பிட்ட குறிப்புகளானது ஆமைகளின் ஓடுகளிலும் மாடுகளின் தோள்பட்டைகளிலும் எழுதப்பட்டுள்ளது.
நாளிதுவரை குறிப்பிட்ட சுவடியில் எழுதப்பட்டுள்ள 5000 எழுத்துக்களில் பாதி அளவுக்கு மட்டுமே வல்லுநர்களால் வாசித்து அதன் பொருளை விளக்க முடிந்துள்ளது.
மேலும் வாசிக்கப்படாமல் 3000கும் மேற்பட்ட எழுத்துகள் உள்ளதாகவும், பல குறிப்புகள் சீனாவில் உள்ள மக்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் எனவும், ஆனால் காலப்போக்கில் அவை யாவும் மாற்றம் கண்டுள்ளதால் தற்போது இந்த குறிப்புகளை வாசித்து பொருள் விளக்குவது என்பது கடினமானதாக இருப்பதாக சீனாவில் உள்ள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு எழுத்துக்கும் 15,000 டொலர் வெகுமதி: சீனா அருங்காட்சியகம் அழைப்பு
Reviewed by Author
on
August 02, 2017
Rating:

No comments:
Post a Comment