15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!
ஹொங் கொங் மற்றும் 15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன் ஐரோப்பிய ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
நெதர்லாந்து பண்ணைகளில் உண்ணிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் Fipronil எனும் மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதுவே குறித்த முட்டைகள் பாதிப்படையக் காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மருந்தில் உள்ள நச்சுத்தன்மை முட்டைகளிலும் பரவியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், நெதர்லாந்திலிருந்து ஐரோப்பிய சந்தைக்கு அனுப்பப்பட்ட பல மில்லியன் முட்டைகள் முன்னதாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!
Reviewed by Author
on
August 12, 2017
Rating:

No comments:
Post a Comment