உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவமாணவிகளுக்கு வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்....மன்னாரில் 1940 பேர் இம்முறை....
தற்பொழுது நடைபெற இருக்கும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் இம்முறை 1940 பரீட்ச்சாத்திரிகள் இருக்கின்றனர்
.
நாளை 08ந் திகதி (08.08.2017) தொடக்கம் 03.09.2017 வரை இலங்கை பூராகவும் நடைபெற இருக்கும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் 16 பரீட்சை நிலையங்களில் 1940 பேர் பரீட்சையில் தோற்ற இருக்கின்றனர்.
இவர்களில் 1439 பேர் பாடசாலை மாணவர்களும் 501 நபர்கள் தனியார் பரீட்சாத்திரிகளுமாவார். இதற்காக இப்பகுதியில் 07 இணைப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்வரும் 20.08.2017 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமை பரிசுப்பரீட்சையில் மன்னார் மாவட்டத்திலிருந்து 28 பரீட்சை நிலையங்களில் 2284 மாணவர்கள் தோற்ற இருக்கின்றனர்
.
இவற்றை கண்காணித்து செயல்படுத்தவதற்காக 15 இணைப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அமைதியாக படித்தவற்றை மனதில் நிறுத்தி நிதானமாக குறிக்கப்பட்ட நேரத்திற்குள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவாக சரியாக விடையெழுதி இந்தப்பரீட்சையில் வெற்றியடைய நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவமாணவிகளுக்கு வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்....மன்னாரில் 1940 பேர் இம்முறை....
Reviewed by Author
on
August 07, 2017
Rating:

No comments:
Post a Comment