2 ஆண்டுகள்... 17 தாக்குதல்கள்: ஐரோப்பாவை வேட்டையாடும் பயங்கரவாதம்...
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகளால் பர்சிலோனா தாக்குதல் உட்பட ஐரோப்பா முழுவதும் 17 தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளது.
இதில் பிரான்சில் 6 முறை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தலா 3 முறை ஜேர்மனி மற்றும் பிரித்தானியா நாடுகளிலும் 2 முறை ஸ்பெயின் நாட்டிலும், தலா ஒருமுறை பெல்ஜியம் மற்றும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 364 பேரின் உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்டுள்ளது. இதில் இருமடங்கு மக்கள் படுகாயத்துடன் உயிர் பிழைத்து வாழ்கின்றனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்படும் குறித்த தாக்குதல்களால் உளவியல் ரீதியாக உருக்குலையும் மக்களுக்கு எதிர்காலம் மீது கடும் அச்சத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
The Bataclan, Paris - November 13, 2015
பாரிஸ் நகரின் Bataclan அரங்கத்தில் இசை நிகழ்ச்சியின்போது உள்ளே புகுந்த 3 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 90 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.
அதே நாளில் Le Carillon தேநீர் விடுதியில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 39 பேர் பரிதாபமக உயிரிழந்தனர் மேலும் 42 பேர் படுகாயமடைந்தனர்.
Brussels Zaventem விமான நிலையம் மற்றும் Maalbeek metro station, Brussels - March 22, 2016
உள்ளூர் நேரப்படி 7:58 மணியளவில் பயங்கரவாதிகளால் 2 வெடிகுண்டுகள் விமான நிலையத்தில் இயக்கப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒரு குண்டு வெடித்தது. இரண்டு தாக்குதலிலும் மொத்தமாக 32 பேர் பலியாகினர், 340 பேர் காயமடைந்தனர்.
Magnanville, Paris - June 13, 2016
பாரிசின் புறநகர் பகுதியான Magnanville ல் ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவரால் 2 பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர்.
Nice - July 14, 2016
நைஸ் நகரில் Bastille Day கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது லொறியை ஏற்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 86 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
Munich - July 22, 2016
பிரபல உணவு விடுதி ஒன்றில் 18 வயது நபர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூடில் 9 பேர் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்தனர்.
Ansbach in Bavaria - July 24, 2016
இசைவிழா அரங்கத்தின் வெளியே ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவரால் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.
Saint-Etienne-du-Rouvray, Normandy - July 26, 2016
85 வயது கிறிஸ்தவ பாதியாரை ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகள் இருவர் கத்தியால் தாக்கி கொலை செய்தனர்.
Christmas Market in Berlin - December 19, 2016
பெர்லினின் மத்திய பகுதியில் அமைந்திருந்த கிறிஸ்துமஸ் சந்தையில் லொறியை செலுத்தி மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 56 பேர் காயமடைந்தனர்.
The Louvre museum, Paris - February 3, 2017
பாரிசில் Louvre அருங்காட்சியகத்தை காவல் காத்து வந்த ராணுவத்தினர் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்றார்.
Orly Airport, Paris - March 18, 2017
இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் ராணுவ வீரர் ஒருவரை கொல்ல முயற்சி. இதில் அந்த நபரை அந்த பகுதியில் இருந்த ராணுவத்தினரே சுட்டு கொன்றனர்.
Westminster Bridge, London - March 22, 2017
பிரித்தானியாவில் பாராளுமன்ற கட்டிடத்தின் அருகாமையில் காரை செலுத்தி தாக்குதல் முயற்சி. இச்சம்பவத்தில் சுற்றுலாப்பயணிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
Stockholm - April 7, 2017
மக்கள் கூட்டத்தினிடையே லொறியை செலுத்தி மேற்கொண்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
Manchester Arena - May 22, 2017
பிரபல பாடகி Ariana Grande இசை நிகழ்ச்சியின் முடிவில் பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டை இயக்கி தாக்குதல் நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
Borough Market and London Bridge - June 3, 2017
லண்டன் பாலத்தில் வாகனத்தை செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளையும் பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
Barcelona - August 17, 2017
பார்சிலோனாவின் பிரபல வளாகம் ஒன்றில் வாகனத்தை செலுத்தி மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
Cambrils - August 18, 2017
பொதுமக்களிடையே வாகனத்தை செலுத்தி நடத்திய தாக்குதலில் ஒரு காவலர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். தொடர்புடைய 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Turku, Finland - August 18, 2017
மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், பல பேர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

2 ஆண்டுகள்... 17 தாக்குதல்கள்: ஐரோப்பாவை வேட்டையாடும் பயங்கரவாதம்...
Reviewed by Author
on
August 19, 2017
Rating:

No comments:
Post a Comment