2வது டெஸ்டில் இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு....
கொழும்பில் நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை மோதும் 2வது டெஸ்ட் போட்டி 3ம் திகதி கொழும்பு மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில், விளையாடும் 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தினேஸ் சந்திமால், லக்ஷான் சந்தகென் மற்றும் திரிமான்ன இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர். லஹிரு திரிமான்ன 13 மாதங்களுக்கு பின்னர் அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக ஓய்வு பெற்று வரும் அசேல குணரட்னவிற்கு பதிலாக திரிமான்ன அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி வீரர்களின் விபரம், அணித்தலைவர் தினேஸ் சந்திமால், மேத்யூஸ், உபுல் தரங்க, கருணாரட்ன, திக்வெல்ல, குசல் மெண்டிஸ், சில்வா, குணதிலக, குமார, பிரனாந்து மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, மலிந்த புஷ்ப குமார, லக்ஷான் சந்தகென் மற்றும் திரிமான்ன ஆகியோர் அணியின் கூடுதல் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2வது டெஸ்டில் இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு....
Reviewed by Author
on
August 02, 2017
Rating:

No comments:
Post a Comment