27 ஆண்டுகளுக்கு முன்னர் கபில்தேவ் செய்த சாதனை: இன்னும் யாரும் முறியடிக்கலையே?
இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவின் சாதனையை தற்போது வரை யாரும் முறியடிக்காததால் 27 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்திய அணிக்கு உலகக்கிண்ணம் வாங்கி தந்தவர் கபில்தேவ். இவர் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்துள்ளார்.
அந்தவகையில் கடந்த 1990-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது, பாலோ ஆன் தவிர்க்க இந்தியாவுக்கு 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
இதனால் இந்திய அணி பலோ ஆன் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் நின்றிருந்த கபில்தேவ், ஹமீங் வீசிய அந்த ஓவரின் 4 பந்துகளை தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசி, டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து நான்கு சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தற்போது கிரிக்கெட் உலகில் பல்வேறு அதிரடி வீரர்கள் வந்தாலும், டெஸ்ட் போட்டியில் கபில்தேவ் தொடர்ந்து அடித்த அந்த 4 சிக்ஸர்களை யாரும் அடிக்கவில்லையே? அந்த சாதனை நிகழ்த்தி 27 வருடங்கள் ஆன நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 3 சிக்ஸர் அடித்து, நான்காவது சிக்ஸர் அடிக்க முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக அவுட் ஆனார்.
இதனால் கபில்தேவின் சாதனை தற்போது வரை நீடித்து வருகிறது. இதை யார் முறியடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் கபில்தேவ் செய்த சாதனை: இன்னும் யாரும் முறியடிக்கலையே?
Reviewed by Author
on
August 01, 2017
Rating:

No comments:
Post a Comment