உலகிலேயே முதன்முறையாக அறிமுகமாகும் 600 MHz LTE வலையமைப்பு...
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட இணைய வலையமைப்பினை ஏற்படுத்தவுள்ளதாக T-Mobile நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உலகிலேயே முதன் முதலாக 600 MHz LTE மொபைல் வலையமைப்பினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த வலையமைப்பானது அமெரிக்காவின் Wyoming, Northwest Oregon, West Texas, Southwest Kansas, the Oklahoma panhandle, Western North Dakota, Maine, Coastal North Carolina, Central Pennsylvania, Central Virginia மற்றும் Eastern Washington பகுதிகளில் இவ்வருடத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இவ் அதிர்வெண் கூடிய வலையமைப்பானது குறைந்த சிக்னல் உள்ள நேரத்திலும் துல்லியமான தொடர்பாடலை தரவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே முதன்முறையாக அறிமுகமாகும் 600 MHz LTE வலையமைப்பு...
Reviewed by Author
on
August 19, 2017
Rating:

No comments:
Post a Comment