குடல் புண்களை குணப்படுத்த நனோ ரோபோக்கள் உருவாக்கம்!
குடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளை எடுத்துச் செல்லக்கூடிய நனோ ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ரோபோக்கள் மனிதனின் தலை முடியின் தடிப்பை விடவும் அரை மடங்கு பருமன் உடையவை.
குடல் புண்கள் பொதுவாக வயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மை காரணமாகவே ஏற்படுகின்றன.
இந்த அமிலத்தன்மைக்கு ஊடாகவும் பயணிக்கும் ஆற்றல் குறித்த ரோபோக்களுக்கு உண்டு.
முதன் முறையாக எலிகளில் இந்த ரோபோக்கள் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளன.
கலிபோர்னியா மற்றும் சான்டிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்த நனோ ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.
இவற்றின் மூலம் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மருந்தினை செலுத்துவதன் ஊடாக குடற்புண் தாக்கத்திற்கு சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
குடல் புண்களை குணப்படுத்த நனோ ரோபோக்கள் உருவாக்கம்!
Reviewed by Author
on
August 19, 2017
Rating:

No comments:
Post a Comment