மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 7 மாதத்தில் 393 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் (PHOTOS)
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 393 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார்.
மன்னாரில் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் கடந்த மே மாத பிற்பகுதியில் இருந்து இன்று வரை மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக வரட்சி நிலவுகின்ற காலப்பகுதியில் மன்னார் நகரப்பகுதியை அன்மித்த மூர்வீதி,உப்புக்குளம்,ஆகிய கிராமங்களைத்தவிர ஏனைய கிராமங்களில் டெங்கு நுளம்பின் பரவல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மூர்வீதி மற்றும் உப்புக்குளம் ஆகிய கிராமங்களில் கடந்த யூலை மாதம் முதல் தற்போது வரை சுமார் 23 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூர்வீதி மற்றும் உப்புக்குளம் போன்ற பகுதிகலே எமக்கு சவாலாக காணப்படுகின்றது.
குறித்த பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்தமைக்கான காரணம் டெங்கு நுளம்பின் பெறுக்கமானது வீட்டின் உள்ளக பகுதிகளில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக குளிர் சாதனப்பெட்டி உள்ளிட்ட வீட்டினுள் காணப்படுகின்ற உபகரணங்களில் தேங்கி நிற்கின்ற நீரில் டெங்கு நுளம்பின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலும் குளியலரையில் காணப்படுகின்ற சீமேந்து தொட்டி,பிளாஸ்ரிக் பெரல் போன்றவற்றில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
சுமார் 6 தொடக்கம் 7 வரையிலான விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறித்த இரு பிரதேசங்களிலும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டுள்ளோம்.
தற்போது குறித்த பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் பரவல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை பொறுத்தவரையில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் எங்களினால் செயல்படுத்தப்பட்ட அனைத்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.
வருட ஆரம்பத்தில் பேசாலை,காட்டாஸ்பத்திரி,தாழ்வுபாடு, எருக்கலம்பிட்டி, தோட்டவெளி, பள்ளிமுனை போன்ற பகுதிகளில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் பாரிய வெற்றி ஏற்பட்டுள்ளது.
எனினும் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எம் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தென்பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் பருவ மழை
தெடங்கியதன் பிற்பாடு எமது பிரதேசத்தில் டெங்கு நுளம்பின் உற்பத்தி மற்றும் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.
-எனவே பொது மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம்.டெங்கு நுளம்பு தடுப்புச்சட்டத்திற்கு எதிராக செயற்பட்ட குடியிறுப்பாளர்கள் 14 பேரூக்கு எதிராக நிதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த பலருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு குறைபாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் சுமார் 15 பேரூக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
-இனி வரும் காலங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமடையும்.மக்கள் அதிகாரிகளுக்கு தீவிர ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி.ஆர்.சி.லெம்பேட் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 7 மாதத்தில் 393 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் (PHOTOS)
Reviewed by Author
on
August 08, 2017
Rating:
No comments:
Post a Comment