நான் ஏலியன்! 9 வயது சிறுவன் அனுப்பிய விண்ணப்பம்
நாசாவின் பூமியைப் பாதுகாக்கும் வேலைக்கு 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவன் அனுப்பிய விண்ணப்பம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஏலியன்களிடமிருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்தநிலையில் நாசாவின் பூமியைப் பாதுகாக்கும் வேலைக்கு விண்ணப்பித்து நாசாவுக்கு ஜேக் எழுதியுள்ள கடிதத்தில், எனது பெயர் ஜேக் டேவிஸ். பூமியின் பாதுகாவலன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு 9 வயது மட்டுமே ஆகியிருக்கலாம். ஆனால், நான் இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என்று நினைக்கிறேன்.
ஏலியன் என்றே எனது சகோதரி என்னை அழைப்பதும் அதற்கான காரணங்களுள் ஒன்று. இதுதவிர, விண்வெளி மற்றும் ஏலியன் தொடர்பாக வெளியாகியுள்ள அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்ளேன்.
மேலும், மார்வெல் 'ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டு' சீரியல்களையும் தவறாமல் பார்த்து வருகிறேன். 'மென் இன் பிளாக்' படத்தையும் பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன். வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறேன்.
நான் இளமையாக இருப்பதால் ஏலியன்கள்போல சிந்திக்கக் கற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன் என்று ஜேக் டேவிஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விண்ணப்பக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நான் ஏலியன்! 9 வயது சிறுவன் அனுப்பிய விண்ணப்பம்
Reviewed by Author
on
August 05, 2017
Rating:

No comments:
Post a Comment