நான் திரும்ப வருவேன்! பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ள பிரபாகரன் திரைப்படம்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் "ஒக்காடு மிகிலாடு" Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது.
குறித்த திரைப்படமானது "நான் திரும்ப வருவேன்" என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமான இந்த திரைப்படத்தின் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்றைய தினம் வெளியாகியுள்ள "நான் திரும்ப வருவேன்" திரைப்படத்தின் முன்னோடி காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"நான் திரும்ப வருவேன்" (ஒக்காடு மிகிலாடு - Okkadu Migiladu) என்ற திரைப்படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கதாபாத்திரத்தில், தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள மஞ்சு மனோஜ், அதில் ஒரு கதாபாத்திரம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான் திரும்ப வருவேன்! பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ள பிரபாகரன் திரைப்படம்.
Reviewed by Author
on
August 21, 2017
Rating:

No comments:
Post a Comment