மணமகளாகும் சிறுமிகள்: அதிர வைக்கும் காரணம்.....
போர்ச்சூழல் காரணமாக பெரும்பாலான சிரிய நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களில் தங்கள் நிதிச்சுமையைக் குறைக்க குழந்தை திருமணங்கள் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜோர்டானில் வசித்து வரும் சிரிய நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினரே இதுபோன்ற திருமணங்களை ஊக்குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் வெளிநாடுகளில் நிறைய பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதால் அவர்களது கவுரவத்தை பாதுகாக்கும் ஒரு வழியாகவும் இத்திருமணம் பார்க்கப்படுகிறது.
ஜோர்டானில் இப்படி நடத்திவைக்கப்படும் குழந்தை திருமணங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் முதல் முறையாக நீண்ட சந்தேகத்திற்கிடமான அளவில் அதிகரித்துள்ளது.
ஜோர்டானில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இதில் 2.9 மில்லியன் மக்கள் வெளிநாட்டவர்கள். அதிலும் 1.2 மில்லியன் மக்கள் சிரியர்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 13லிருந்து 17க்கு இடைப்பட்ட வயதில் ஜோர்டானில் வசித்துவரும் அனைத்து சிரியப் பெண்களில் கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர் திருமணம் செய்து கொண்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2010 இல் இது 33 சதவீதமாக இருந்தது.
இளம்பருவத் திருமணம் வறுமையில் கொண்டுபோய்விடும், பெரும்பாலான சிரியப் பெண்கள் கல்வியை இழக்கவும் காரணமாகிவிடும்.
இது அகதிகளுக்கும் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள ஒரு மோசமான போக்கு என்று பல ஆண்டுகளாக நாட்டைவிட்டு வெளியே வாழ விரும்பும் சிரியர்களோடு ஐநா அதிகாரிகள் மற்றும் ஜோர்டானிய அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணமகளாகும் சிறுமிகள்: அதிர வைக்கும் காரணம்.....
Reviewed by Author
on
August 08, 2017
Rating:

No comments:
Post a Comment