அண்மைய செய்திகள்

recent
-

உலகப் புகழ்பெற்ற கால்பந்து தொடர்: முதன்முறையாக பெண் நடுவர் நியமனம்.....


ஐரோப்பிய கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவராக பணியாற்ற உள்ளார் பிபியானா ஸ்டைன்ஹாஸ்.

ஜேர்மனியை சேர்ந்த 39 வயதாகும் பிபியானா ஸ்டைன்ஹாஸ் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வருகுிறார்.

உள்நாட்டு போட்டிகளில் கால்பந்து நடுவராக கலக்கி வரும் பிபியானா, முதன் முறையாக ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் ஒன்றான Bundesliga தொடரின் பெண் நடுவராக பணியாற்ற உள்ளார்.

இதுகுறித்து பிபியானா கூறுகையில், எனது கனவு நிறைவேறிவிட்டது, என் முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மக்களும், ஊடகங்களும் என்னை உற்றுநோக்குவதால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.

இவருக்கும் உலகின் முன்னணி வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற கால்பந்து தொடர்: முதன்முறையாக பெண் நடுவர் நியமனம்..... Reviewed by Author on August 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.