மாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல்....
மாணவ தாதியர் பயிற்சியின் பொருட்டு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு கோரியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தினதும் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எண்ணிக்கை தீர்மானிக்கப்படவுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2015 அல்லது 2016 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப்பிரிவில் தோற்றி 3 பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
அத்துடன், விண்ணப்பதாரி 18 - 28 வயதுக்கு உட்பட்டவராகவும், திருமணமாகாதவராக இருத்தல் அவசியம். விண்ணப்ப கட்டணம் 300 ரூபா எனவும், ஆகஸ்ட் 31ஆம் திகதி விண்ணப்ப முடிவுத் திகதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு நடைபெறும் என சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச அறிவித்துள்ளார்.
மாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல்....
Reviewed by Author
on
August 13, 2017
Rating:

No comments:
Post a Comment