அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவின் புதிய எஃப்.பி.ஐ. தலைவராக ரே நியமனம் - செனட் சபை ஒப்புதல்.....


அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குனராக கிறிஸ்டோபர் விரே நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய எஃப்.பி.ஐ. தலைவராக ரே நியமனம் - செனட் சபை ஒப்புதல்

வாஷிங்டன்: 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் பிரச்சார அணியினருக்கு தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து வந்த ஜேம்ஸ் கோமேவை, உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. இயக்குனர் பதவியிலிருந்து அதிபர் டிரம்ப் திடீரென்று கடந்த மாதம் நீக்கினார்.

அவருக்கு பதிலாக எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குனராக கிறிஸ்டபர் விரேவை கடந்த மாதம் 20ம் தேதி அதிபர் நியமித்தார். இந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் 92-5 என்ற கணக்கில் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது.

விரே, முன்னாள் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ் தலைமையிலான அரசின் தலைமை நீதித்துறை அலுவலராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புதிய எஃப்.பி.ஐ. தலைவராக ரே நியமனம் - செனட் சபை ஒப்புதல்..... Reviewed by Author on August 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.