கொட்டும் மழையிலும் சதா சகாய அன்னையின் திருச்சொரூப பவனி....
மட்டக்களப்பு - மாமாங்கம் சதா சகாய மாதா அன்னையின் திருச்சொரூப பவனி மிகவும் சிறப்பாக இடம்பெறுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று மாலை 7.20 மணியளவில் பங்குத் தந்தை தலைமையில், விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆரம்பமானது.
அத்துடன், சதா சகாய அன்னை ஆலயமானது பழமை வாய்த்த ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதுடன், மிகவும் பிரசித்தி பெற்ற மாதா ஆலயமாகவும் கருதப்படுகின்றது.
கடந்த நான்காம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்த திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடியிறக்க திருவிழாவை முன்னிட்டு மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டு கழகத்தினரால் அன்னதானம் வழங்கப்படுவதுடன் துவிச்சக்கர வண்டி போட்டியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொட்டும் மழையிலும் சதா சகாய அன்னையின் திருச்சொரூப பவனி....
Reviewed by Author
on
August 13, 2017
Rating:

No comments:
Post a Comment