மன்னார் மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் கட்டுகரை திட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளால் மக்கள் விசனம்
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் செட்டியார் மகன்கட்டையடம்பன். என்னும் கிராமத்தில் 86 குடும்பங்கள் பூர்வீகத்தில் இருந்தே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் 140 வருடகாலமாக (பூர்வீகமாக) விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கு தற்போது மன்னர் மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் கட்டுகரை திட்டத்தில் உள்ள பணியாளர்கள்மக்களின் 550 ஏக்கர். நெற் செய்கைக்கான காணிகளை எந்த ஒரு அறிவித்தலோ ஆலோசனயோ இன்றி அளவெடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த மக்கள் பரபரப்புடன் நீர்பாசன திணைக்கள அலுவலகம் (செம்மந்தீவு , முருங்கனை ) அணுகி வினாவிய போது .... அவர்கள் கட்டுகரை குளம் விரிவாக்க உள்ளதாகவும் . இதனால் அவர்கள் அளவு எடுக்க வந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த செயற்பாடு அக் கிராம மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச் செயற்பாடு முன்னெடுக்கப் பட்டால் கிட்டத்தட்ட 3/4 பகுதி (550 acres) விவசாய காணிகள் பாதிக்கப்படுவதுடன் 86 குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இந்த நிலைமை தொடர்பாக அதிகாரிகளால் எந்த ஒரு விளக்கமோ ஆலோசனையோ மக்களிடையே கூறப்படவில்லை.
இந்த திட்டத்தை மேற்கொண்டால் இந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்களின் நிலை??.. அவர்களது ஜுவனோ பாயத்தின் நிலை??. கேள்விக் குறியாக உள்ளது..
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...
தகவல்_ செட்டியார்கட்டையடம்பன்.
கமக்கார அமைப்பு.
மன்னார் மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் கட்டுகரை திட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளால் மக்கள் விசனம்
Reviewed by NEWMANNAR
on
August 04, 2017
Rating:

No comments:
Post a Comment