வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரன் பதவிப்பிரமாணம்...
வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக யாழ். வணிகர் கழகத் தலைவர் இ. ஜெயசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று மாலை யாழ். வணிகர் கழகப் பணிமனையில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மாகாணசபையின் அங்கத்துவக் கட்சிகளுக்கான சுழற்சிமுறை ஆசனம் இந்த முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் சுழற்சி முறை ஆசனத்தைப் பெற்றுப் பதவி வகித்து வந்த ரெலோ அமைப்பைச் சேர்ந்த செ .மயூரனின் பதவிக்காலம் கடந்த மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து இ.ஜெயசேகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக நியமிதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா முன்னிலைப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டிருந்த போதும் வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் நால்வர் கலந்து கொண்டிருந்த போதும் ஏனைய வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
மேலும், பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்காமை பலர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரன் பதவிப்பிரமாணம்...
Reviewed by Author
on
August 03, 2017
Rating:

No comments:
Post a Comment