ஜெயலலிதாவின் ஆன்மாவோடு மூன்று மாதங்களாக பேசி வருகிறேன்! அதிர்ச்சி கொடுக்கும் கேரள ஜோதிடர்
ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா ஆட்சி, அதிகாரத்துக்கு வரக் கூடாது என்றும் 30 பேரை பழி வாங்கத் துடிப்பதாகவும் குறிப்பிட்டு கேரள ஜோதிடர் வேங்கட சர்மா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா இயற்கையாக மரணிக்கவில்லை என்றும், அவரது தொண்டர்கள் மாத்திரம் அல்லது மக்கள் சந்தேகிப்பது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீ வேங்கட சர்மா கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் ஜோதிடர் கூறுகையில், ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் கடந்த 3 மாதங்கள் பேசி வருகிறேன். அவர் மரணம் இயற்கையானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அவர் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இருப்பார்.
27 பேர் முதல் 30 பேர் வரை பழிவாங்க அவரது ஆன்மா துடித்து கொண்டிருக்கிறது.
சசிகலா ஆட்சி, அதிகாரத்துக்கு வருவதற்கு அவரது ஆன்மா விரும்பவில்லை என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் ஆன்மாவோடு மூன்று மாதங்களாக பேசி வருகிறேன்! அதிர்ச்சி கொடுக்கும் கேரள ஜோதிடர்
Reviewed by Author
on
August 28, 2017
Rating:

No comments:
Post a Comment