தன்மானம் தான் முக்கியம் - ரஜினியை சீண்டிய கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு....
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் ஆளும்கட்சி அரசியலை பற்றி விமர்சித்து வந்தார். அதற்கு அதிமுக வினர்கள் சிலர் கமலுக்கு பின்னால் திமுக செயல்பாடு இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
சென்னையில் முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகவும், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இவர்கள் மட்டுமின்றி கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கமல், நான் ரசித்த முதல் தமிழ் சிவாஜியுடையது, அதன் பின்னர் தான் தெரிந்தது அந்த தமிழுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்று, இதையடுத்து அவரின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன்.
இந்த விழாவிற்கு ரஜினி வருகிறாரா அவர் பேசுகிறாரா என்று கேட்டேன். அப்போது அவர் பேசவில்லை என்பதை அறிந்தது, பார்வையாளராக கலந்துகொள்ளலாம் என்று நினைத்தேன்.
ஆனால் தற்காப்பு முக்கியமில்லை, தன்மானமே முக்கியம்.
இவ்விழாவில் நான் கலந்து கொள்கிறேன் என்றதும், கழகத்தில் நான் சேரப் போவதைப் பற்றி கேட்கிறார்கள். நான் சேருவது என்றால் கடந்த 1989-ஆம் ஆண்டு கலைஞர் தன்னை அழைத்த போதே சேர்ந்திருப்பேன்.
இந்த மேடையில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்பவர்கள் இருக்கிறார்கள், இந்தக் கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தேன்.
திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமோ தென்னிந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை.
சிந்து நாகரிகம் முதலே திராவிடம் உள்ளது, ஜனகனமனயில் திராவிடம் உள்ள வரை திராவிடம் இருக்கும் திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை.
திராவிடம் என்பது மக்கள் சக்தி, திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அவர்கள் பத்திரிக்கை கொடுத்துவிட்டு போன பிறகு கண்ணாடியை பார்த்து கொண்டு இருந்தேன் "அட முட்டாள் தற்காப்பா முக்கியம் தன்மானம் தான் முக்கியம் எவ்வளவு பெரிய வாய்ப்பு இது என்று உணர்ந்தேன்” என கூறினார்.
தன்மானம் தான் முக்கியம் - ரஜினியை சீண்டிய கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு....
Reviewed by Author
on
August 11, 2017
Rating:

No comments:
Post a Comment