கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம்....
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலனுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி, கிளிநொச்சி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி பாதிப்புகள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம்....
Reviewed by Author
on
August 30, 2017
Rating:

No comments:
Post a Comment