இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிப்பு....
இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியின் தலைவராக சாமர கப்புகெதர செயற்பட்டிருந்தார்.
எனினும், உபாதை காரணமாக இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாட முடியாததை அடுத்தே, இலங்கை அணிக்கு தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாதாக அஞ்சலோ மெத்யூஸ் அல்லது லசித் மலிங்கவை தலைவராக நியமிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிப்பு....
Reviewed by Author
on
August 30, 2017
Rating:

No comments:
Post a Comment