மடு அன்னையின் ஆவணி விண்ணேற்பு திருநாளை வழக்கமான முறையில் கொண்டாட முடியாத நிலை-அருட்தந்தை
கடந்த சில தினங்களாகவும்,குறிப்பாக இன்று திங்கட்கிழமை மடுத்திருத்தலத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை(15) மடு அன்னையின் ஆவணி விண்ணேற்பு திருநாளை வழக்கமான முறையில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் மடுத்திருப்பதியில் தங்கியிறுப்பதற்கு இன்று(14) திங்கட்கிழமை ஏற்பட்டுள்ள நிலை ஏதுவாக இல்லை.அதனால் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் தலைமையில் குருக்கள் கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.
-வழிபாட்டு நேரங்களில் மக்கள் தங்கியிருக்கின்ற போட்டிக்கோ பகுதிகளும்,அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும்,மழை நீரில் மூழ்கியுள்ளது.
-எனவே வழக்கமான வழிபாடுகள் மேற்கொள்ளுவது சாத்தியமற்றது.
-இன்று திங்கட்கிழமை வழக்கமாக நடைபெறும் மாலை வழிபாடுகள் நிறுத்தப்பட்டு அதற்குப்பதிலாக மாலை 4.30 மணிக்கு பிரதான ஆலயத்தினுள் திருச் செபமாலையின் இரண்டு காணிக்கைகள் செபிக்கப்பட்டு,மடு அன்னைக்கு யாத்திரிகர்களால் பிரியாவிடை செபம் சொல்லப்பட்டு ஈற்றில் மரியன்னையின் திருச்சுரூப ஆசிர்வாதத்துடன் இன்றைய வழிபாடுகள் நிறைவு செய்யப்படும்.
தொடர்ந்தும் பெரு மழை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதினால் வானிலை மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு நாளைய நாள் திருப்பலி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
August 15, 2017
Rating:

No comments:
Post a Comment