மன்னார் பிரதான பாலம் இருளில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் மன்னார் பிரதேச சபையும் நகரசபையும்....மக்கள் கவலையோடு....
மன்னார் பிரதான பாலம் இருளில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் மன்னார் பிரதேச சபையும் நகரசபையும்....மக்கள் கவலையோடு.....
பலமுறை நேரில் சென்று கதைத்தும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியும் எந்தப்பலனும் இல்லை..... இனி இந்தப்பாதையில் ஏதாவது உயிர்பலி போனால் தான் மின்குமிழ்களைப்பொருத்துவார்கள் போல.....
மன்னார் நகரசபை-காற்று பலமாக வீசுவதாலும் அந்தளவு உயரத்திற்கு கிரேன் வசதி இல்லாமையாலும் தான் மின்குமிழ்கள் பொருத்த முடியாது உள்ளது.
மன்னார் பிரதேச சபை-ஒருவரிடம் இவ்வேலைபொறுப்பை ஒப்படைத்தோம் அவர் இன்னும் சரிவரச்செய்யவில்லை .....
இப்படியான அற்பகாரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகவா உள்ளது.
இப்படி எங்களது சொந்த விடையங்களில் இருப்போமா......ஏதோ ஒரு முறையில் ஏதோ ஒரு வழியில் பிரச்சினையை தீர்க்க முனையமாட்டோமா....அப்படி ஏன் பொதுவிடையங்களில் செய்ய தவறிவிடுகின்றோம்......இனியாவது.......
மன்னார் மாவட்டத்தின் அழகானவிடையத்தின் முதல் இடத்தினைபெறுகின்றது மன்னார் தீவுப்பகுதியினை இணைக்கின்ற மிகவும் முக்கியமான பிரதானபாலம் ஆகும்.
நீண்ட நாட்களாக இருள்மண்டிக்கிடக்கும் பாலத்தின் பகுதியில் நடக்கும் சீர்கேடுகள் மற்றும் விபத்துக்களை தடுப்பதற்கு இலகுவாகசெய்யவேண்டிய ஒரே விடையம் பிரகாசமான மின்குமிழ்கள் பொருத்தவேண்டியது மட்டமே….
கடந்த 2015 ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார் (பாலத்தின் தொடக்கம் தள்ளாடி வரையான பகுதி அடிக்கடி விபத்துக்கள் இடம் பெறுவதாலும் கட்டாக்காலிகளின் (மாடுகள் மற்றும் கழுதைகள்) நடமாட்டம் அதிகம் என்பதாலும் பொது மக்களின் அசௌகரியங்களை குறைப்பதற்காகவும் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் மன்னார் பிரதேச சபையினால்சோலர் தெருவிளக்குகள் பூட்டப்பட்டமை யாவரும் அறிந்தே.
அங்கு பூட்டப்பட்டுள்ள 16 சோலர் விளக்குகள் ஒவ்வொன்றும் தலா 100000.00 ரூபா பெறுமதியானது.
பயணிகள் விபத்துக்குள்ளாவதோடு பெருங்காயங்களுக்கும் உள்ளாகி அவஸ்தைப்படுகின்றார்கள் இப்பகுதிக்கு பாலத்துடன் சேர்ந்து பிரதானபாதைக்கு பொறுப்பாக மன்னார் பிரதேசசபை உள்ளது ஆனால் பிரதேச சபைஅதிகாரிகள் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை....
மக்களினதும் பயணிகளினதும் நன்மையினையும் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு மிகவிரைவாக புதிய நல்ல பிரகாசமான மின்குமிழ்களைப்பொருத்தி இருள்மண்டிக்கிடக்கும் பாலத்தினையும்பிரதானபாதையும் ஒளியூட்டவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாகும்.
மன்னார் பிரதேசசபை அதிகாரிகளும் நகரசபை அதிகாரிகளும் தமது கடமையினை மிகவிரைவாக சரிவர செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம் மக்களின் விருப்பம்.
-மன்னார்விழி-

Reviewed by Author
on
August 26, 2017
Rating:

No comments:
Post a Comment