முல்லைத்தீவு - உடையார்கட்டு பகுதியில் நெல் அறுவடை ஆரம்பம்.....
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் சுமார் 300 ஏக்கர் வயல் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் ஒரு விவசாயிக்கு அரை ஏக்கர் நிலம் என்கின்ற அடிப்படையில் நெற்பயிர் செய்கை மேற்கொள்ள கமக்கார அமைப்பு அனுமதி வழங்கியிருந்தது.
இதன் அடிப்படையில் 600 விவசாயிகள் 300 ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் செய்கைளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்பொழுது பருவமடைந்த நெற்பயிர்களை அறுவடை செய்வதில் அப்பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் வறட்சியான காலநிலை நிலவியிருந்த நிலையில் தற்பொழுது பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், உடையர்கட்டு குளம் அப்பகுதி விவசாயிகளை மகிழ்வித்துள்ளது.
முல்லைத்தீவு - உடையார்கட்டு பகுதியில் நெல் அறுவடை ஆரம்பம்.....
Reviewed by Author
on
August 03, 2017
Rating:

No comments:
Post a Comment