எல்லாமும் நீ என்று உணரா என் அறியாமை போக்கு முருகா...
நல்லூர் கந்தப் பெருமானுக்கு இன்று தேர்த் திருவிழா. சண்முகப் பெருமான் தேரேறி வந்து தன் திருப்பெருவடிவை அடியார்களுக்கு காண்பிக்கும் பெருநாள்.
இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி சண்முகப்பெருமான் தேரேறி வரும் காட்சியைக் கண்டு களிப்புறுவர்.
இந்நாளில் வேற்பெருமானிடம் விடும் விண்ணப்பம் என்ன உண்டென்று சிந்திக்கினும் ஒன்றும் புரியா புரிதலே தெரிகின்றது.
உரிமை ஒன்றும் தரா உன் திருவிழா காட்சி காண்கிலேன் என்று கடும் விரதம் கொண்டா லும் சண்முகப் பெருமான் தேரேறி வருகிறான் என்றவுடன் எக்குறை சொல்ல;
ஏன்தான் அவன் திருவிழா காணாமல் விடுவ தென்று தீர்மானம் கொண்டேனோ என்று ஏங்குதல் அன்றி ஏதும் உணர முடியவில்லை.
நல்லூர்க் கந்தனுடன் நான் கோபம் என் றாலும் தேரேற சண்முகன் தென்னகத்து பட் டாடையும் தகதக என மின்னும் பொன் ஆப ரணமும் புனைந்து தேவியர் இருவருடன் எழுந்துவரும் காட்சி இருக்கிறதே. அட!
எல்லாம் நீயடா. நீ இருக்க இல்லை என்று என்ன தான் உண்டு என்று உணரப்பெறாதார் யார் உளர்?
உள்வீதியில் வசந்த மண்டபத்து வாசஸ்தலத் தில் இருந்து சண்முகப் பெருமான் தேரேற எழு கின்றபோது விண் அதிரும் மங்கள வாத்தியம் நான் எனும் அகந்தை போக்கும்.
அவன் அசைந்து வேகமாய் ஓடி பின்ன கர்ந்து முன்னோடி வரும் காட்சி எனை மற ந்து அவன் திருவடி நினைக்கும்.
உள்வீதி கடந்து வெளிவீதி வந்து வெள்ள மாய் நிற்கும் அடியார்களை எட்டிப்பார்ப்பது போல அவன் வரும் காட்சி அடடா மனிதப் பிறவி பெற்றதால் பெரும்பேறு இதுவன்றோ என்று மனம் புளகாங்கிதம் கொள்ளும்.
அந்தக் காட்சியில், களிப்பில், பேருவகை யில், எது உரிமை, எது சுதந்திரம், எது வாழ்வு எல்லாம் மறந்து அவன் தேரேறும் திருக் கோலமே அனைத்தும் என்று உணரப்படும்.
ஆம்,
நல்லூர் சண்முகப் பெருமான் எங்கள் தலைவன். அவனே எங்கள் மன்னன். எந் நாட்டவர்க்கும் இறைவன் தென்னாட்டில் இருந் தாலும் அவன் நெற்றிக்கண் உதித்த சண்முகப் பெருமான் எங்கள் நல்லூரில் இருக்கிறான்.
அதனால்தான் எந்நாட்டவர் வந்தாலும் அவன் திருக்கோலம் காண தவமிருப்பர். என்னதான் இருந்தாலும் எங்கள் இளை ஞர்கள் நல்லூர் வீதியை தம் உடம்பால் வலம் வரும் காட்சி இருக்கிறதே இவ் அற்புதம் எங் கும் காண்கிலோம். அதிகாலை பொழுதில் அங் கப்பிரதட்சணம் நல்லூர் வீதியில் நடந்தேறும்.
அரோகரா... முருகா... கந்தா! நல்லூர் வேலா! என்ற கோசம் கேட்டு கதிரவனும் அதைக் கண்டிட அவாக் கொண்டு மேலேழுவான்.
ஆகா இத்துணை மக்கள் நல்லூர் மண் ணில் நிற்பதால் சண்முகன் தேரேற வரு கிறான் என்று அவனும் களிப்புறுவான்.
எங்கள் மக்கள் வைகறையில் துயில் எழுந்து நீராடி தமை மறந்து பாடி நல்லூர் முரு கனை தேடி ஓடி வருகின்ற அளவில் சண்முகா உன்னிடம் என்னதான் உண்டு எனக்குரை.
அழித்தல் தொழிலே தேர்திருவிழாவின் தத்துவம் என்றால் நான் எனும் என் அகந்தை அழி; தமிழருக்கு தீங்கு செய்வார் தீமை அழி; உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் கயமையை அழி; பதவி எனும் பேராசை பித்தை அழி; சண்முகப்பெருமானே! என்று இரங்கும் என் வேண்டுதல் அளி.
அட என் திருக்கோலம் காணமுடியாய் இப் பித்தன் பிதற்றல் என்று நீ நினைத்தாலும் உன்னையே பின் தொடர்வேன் என் தலைவிதி போக்கு முருகா!
ஒருக்கால் தேர் ஏறமுன் திருக்கோலம் என க்கு காட்டி அருள். நீ இருக்க எனக்கு என்ன குறை சண்முகா!
நன்றி-வலம்புரி-
எல்லாமும் நீ என்று உணரா என் அறியாமை போக்கு முருகா...
Reviewed by Author
on
August 21, 2017
Rating:

No comments:
Post a Comment