பன்றிக்கு பூணூலும்… தமிழர்களின் காதில் பூ கூடை வைக்கும் திராவிடம்!
பன்றிக்கு இவிங்க எதுக்கு தனியா பூணூல் போட்டு போராடுறாங்க.. அதான் அவங்களே ஏற்கனவே எல்லா கோவிலிலும் வராகருக்கு (பன்றி) பூணூல் போட்டுதான் கும்பிட்டுட்டு இருக்காங்க..
எவ்வளவோ விலங்குகள் இருக்க பன்றியை ஏன் இவர்கள் பூனூல் போட தேர்வு செய்கிறார்கள்.. அதை இழிவான விலங்காக கருதுவதால்தானே.. அப்படியானால் பன்றிக்கறி சாப்பிடும் மக்களை இழிவாக கருதுகிறார்கள் என்றுதானே அர்த்தம்..
பார்ப்பனர்கள் அணியும் பூணூல் மட்டும்தான் இங்கு மிகப்பெரிய பிரச்னையா.. தமிழகத்தில் சாதிவெறி ஆணவக்கொலைகள் என இடைநிலை சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. அதற்கு எதிராக சும்மா அடையாளப்போராட்டங்கள் நடத்திவிட்டு பார்ப்பனர்களை மட்டும் சாதிவெறியர்கள் போல் காட்டுகிறார்கள்.
2009க்குப்பின் எழுந்த தமிழர் என்ற இன அடையாள அரசியலும் இந்திய தேசிய எதிர்ப்பு தமிழ்தேசம்.. போன்ற கண்ணோட்டங்களை பார்ப்பனிய எதிர்ப்பு.. திராவிடம் என்று மடை மாற்றப்பார்க்கிறார்கள்.
சாவின் கடைசி துடிப்பில் இருக்கும் திராவிட அரசியலுக்கு மீண்டும் பார்ப்பனியர்களை ஒற்றை எதிரிகளாக்கி உயிர் கொடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
பார்ப்பானர்கள் பார்ப்பனர் அல்லாதோரை வேசி மக்கள் என்று வெளிப்படையாக கூறியதைவிட இந்த திராவிட இயக்கத்தவர்கள்தான் அதிகம் கூறியிருக்கிறார்கள்.
கழுத.. இவங்க பூணூல் போடுறாய்ங்க.. அவிங்க அறுக்குறாய்ங்க என்னமும் பண்ணித்தொலையட்டும்.
ஆனால் அந்த சுவர் விளம்பரத்தில் இருக்கும் வாசகத்தில் இருக்கும் அரசியலே நான் இந்த பதிவை எழுத காரணம்.
அந்த விளம்பரத்தில் பாருங்கள்..
“பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்- தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..” என்ற வரி இருக்கிறது. அந்த வரியில்தான் ஒரு சூட்சுமம் இருக்கிறது.
திராவிடர் கழக கம்பெனியின் தற்போதைய ஓனர் வீரமணி, திராவிடர் தலைவர் என்று சொல்லாமல்
`தமிழர் தலைவர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார்.. ஆனால் தமிழர் திருநாளை திராவிடர் திருநாள் என்றுதான் வேண்டுமென்றே கொண்டாடுவார்.
அதேப்போல்தான் இந்த விளம்பர வாசகத்தில் இருக்கும் அரசியலும். அதாவது தமிழனை சூத்திரனாக்குவதும் பூணூலே என்கிறார்கள்.
இந்த பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திராவிடர்கள் என்பதை வலியுறுத்தி அரசியல் செய்யும் இயக்கம்.
ஆக இவர்கள் பார்வையில் பூணூல் சூத்திரனாக்குவது திராவிடர்களாகதானே இருக்க வேண்டும்.. எதற்கு இந்த இடத்தில் தமிழர்களை இழுக்கிறார்கள். இந்த இடத்தில் மட்டும் எப்படி திராவிடர்கள் தமிழர்கள் ஆனார்கள்..
அப்படியானால் பூணூல் போடாத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள் எல்லாம் பிராமணர்களா.. தமிழன் மட்டும்தான் சூத்திரனா..
போராடுவது.. உட்பட இன்னபிற விசயங்களுக்கு தமிழர் என்ற அடையாளத்தையும், அதிகாரத்திற்கு வருவதற்கு திராவிடர் என்ற அடையாளத்தையும் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இது திராவிடர்களின் தந்திரமான அரசியல்.
முதலில் தமிழர்களா.. திராவிடர்களா என்பதுகுறித்து ஒரு தெளிவுக்கு வாங்க.
நன்றி
கார்ட்டூனிஸ்ட் பாலா
7-8-17
www.linesmedia.in

Reviewed by NEWMANNAR
on
August 08, 2017
Rating:

No comments:
Post a Comment