அதிகளவான தேவைகளைக் கொண்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு...
பின் தங்கிய பகுதியில் அதிகளவான தேவைகளைக் கொண்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு கிளிநொச்சி கல்மடுநகர்ப்பகுதி மக்களுடனான சந்திப்பு அமைந்துள்ளதென கண்டாவளைப் பிரதேச செயலர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
மக்கள் தேவைகளைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல் கல்மடு நகர் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று பிற்பகல் 9 மணியளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடிலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தப் பகுதிகளில் வாழுகின்ற மக்கள் அதிகளவான மக்கள் தேவைகளுடைய மக்களாக உள்ளனர். இவர்களுடைய தேவைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படுகின்றன.
பல மக்களுடைய தேவைகள் நிறைவேற்றவேண்டியுள்ளது. அந்த வகையில் இந்த மக்களினுடைய சந்திப்பின்போது மக்கள் பயன்படுத்த முடியாத பிரதேச சபைக்குச்சொந்தமான பத்துக்கிலோ மீட்டர் வீதியை தற்காலிகமாக புனரமைப்பதற்கும் பிரதேச சபை உறுதியளித்திருக்கின்றது.
இதேவேளை இந்த பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக முன்வைத்து வருகின்ற நீர்ப்பாசன வாய்க்கால்கள், மற்றும் வீதிகளைப்புனரமைப்பதற்கும் நீர்ப்பாசனத்திணைக்களம் உறுதியளித்திருக்கின்றது.
இவ்வாறு மக்களினுடைய சந்திப்பானது மக்களினுடைய தேவைகளை நன்கு கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளுக்கு இந்த இடத்தில் தீர்வு காண முடிந்துள்ளது.
மக்களுடனான தேவைகுறித்து கலந்துரையாடலில் 400 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தி சார்ந்த தேவைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர் என கண்டாவளைப் பிரதேச செயலர் ரி.முகுந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் கல்மடு, நாவல் நகர், றங்கன்குடியிருப்பு, ஒற்றைப்பனையடி, உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 864 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2879 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த பகுதிகளில் வீட்டுத்திட்ட இன்மை, மின்சாரமின்மை, காணிப் பிணக்குத்தீர்க்கப்படாமை, வீதிகள் புனரமைக்கப்படாமை எனப் பல்வேறு குறைபாடுகளை மக்கள் முன் வைத்து வந்தனர்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன், கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர், க.கம்சநாதன், கண்டாவளைப் பிரதேசத்தின் திட்டமிடல் பணிப்பாளர், காணி உத்தியோகஸ்தர், கிராமசேவையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதிகளவான தேவைகளைக் கொண்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு...
Reviewed by Author
on
August 05, 2017
Rating:

No comments:
Post a Comment