சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பிய மைத்திரியின் செயலாளர்!
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தி, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கியே ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கேப்பாப்பிலவில் காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு அனுப்பிய பதில் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட அந்தக் கடிதத்தில்,
மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போன்று காலவரையறைகளை சரியாக நிர்ணயிக்க முடியாது.
இடம்பெயர்ந்தோர் விடயத்தில் ஜனாதிபதி கூடிய அக்கறையுடன் செயற்படுகின்றார்.
இதேவேளை, முடிந்தவரை விரைவாகக் காணிகளை விடுவிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளப்படும். ஜனாதிபதி, அது மாத்திரமல்லாது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும்.
இதனிடையே, கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.
படையினரிடம் இருந்து காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
இதனடிப்படையில், மூன்று மாதத்திற்குள் கேப்பாப்புலவில் மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என நம்புவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பிய மைத்திரியின் செயலாளர்!
Reviewed by Author
on
August 02, 2017
Rating:

No comments:
Post a Comment