சம்பந்தரின் ஆலோசனையை தமிழரசுக் கட்சி புறந்தள்ளுகிறது.
வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் இணைந்து செல்வது தான் நல்லது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் முடிவு.
அவரின் முடிவு அவரின் அரசியல் அனுபவத் தையும் பட்டறிவையும் எடுத்துக் காட்டுகிறது.
எனினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தரின் நிதானமான முடிவுகளுக்கு தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா எதிர்ப் புத் தெரிவிப்பதாகப் பேசப்படுகிறது.
தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு சிலர் முதலமைச்சரை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
அவரின் பதவியை விலக்கிவிட வேண்டும் என்பதில் அவர்கள் இன்னமும் தளர்ந்தாரில்லை.
அண்மையில் வடக்கின் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததன் மூலம் தமிழரசுக் கட்சி பட்டபாடு அனைவரும் அறிந்ததே.
தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு முதலமைச் சருக்கு தமது ஆதரவைத் தெரிவித்த போது, தமிழரசுக் கட்சி நடுங்கிப் போயுற்று. மிகப் பெரிய பாதகத்தை கட்சி செய்துவிட்டது என்ற விமர்ச னங்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழரசுக் கட்சித் தலைமை மதத் தலைவர்களைச்சந்தித்து சமரசம் செய்யு மாறு கேட்டனர்.
அதன்படி சமயத் தலைவர் கள் சமரச முயற்சியில் ஈடுபட்டதன் விளை வாக தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டிருந்த ஆபத்து தணிந்தது.
அதேவேளை தனக்கு இருக்கக்கூடிய மக் கள் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்கக் கூடிய மிகச் சிறந்த சந்தர்ப்பம் முதலமைச்சர் விக்னேஸ் வரன் அவர்களுக்கு ஏற்பட்ட போதிலும் அவர் அவ்வாறான ஒரு முடிவுக்கு போகாமல்,
தமிழ் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை அவசியம் என பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.
ஆனால் தமக்கு ஏற்பட்ட கஷ்டமான சூழ் நிலை தீர்ந்ததும் மீண்டும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி செயற்படுவதென்பது முதலமைச்சரையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற செயல் என்றே கூறவேண்டும்.
இங்குதான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் ஒரு நடுநிலைத்தன்மையுடன் செயற்பட முற்பட்டுள்ளார்.
அதாவது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரனுடன் ஒன்றுபட்டுச் செயற்படுவது அவசி யம் என்பதுடன் வடக்கு மாகாண சபையைக் குழப்புகின்ற வேலையில் தமிழரசுக் கட்சி ஈடுபடக்கூடாது எனவும் முதலமைச்சருடனான சமரசத்தின் போது முதலமைச்சருக்கு தான் எழுதிய கடிதத்தின் உத்தரவாதங்களை - உறுதி மொழிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற் காகவும் இரா.சம்பந்தர் நினைக்கிறார்.
ஆனால் முதலமைச்சரின் விடயத்தில் கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தரையும் எதிர்ப் பதற்கு தமிழரசுக் கட்சித் தலைமை துணிந்து விட்டது.
இதுகாறும் எதுவும் பேசாமல் இருந்த தமிழர சுக் கட்சித் தலைமை இப்போது இரா.சம்பந்தர் அவர்களையே எதிர்க்குமளவுக்கு வந்துள்ள தெனில், பின்னணி பலமாக இருக்கிறது என் பது மட்டும் உறுதியாகிறது.
எதுவாயினும் இரா.சம்பந்தரின் ஆலோச னையை தமிழரசுக் கட்சி கேட்குமாக இருந்தால் மாரகத்தில் இருந்து அக்கட்சி தப்பமுடி யும் அவ்வளவுதான்.
சம்பந்தரின் ஆலோசனையை தமிழரசுக் கட்சி புறந்தள்ளுகிறது.
Reviewed by Author
on
August 10, 2017
Rating:

No comments:
Post a Comment