நெகிழ்தன்மை கொண்ட மின்கலத்தை உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்!
உப்பு தன்மை உடைய நீரில் செயற்படக்கூடியதும் நெகிழ்தன்மை கொண்டதுமான மின்கலத்தினை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவை தற்போது உள்ள நச்சு இரசாயனப் பதார்த்தங்களை கொண்ட மின்கலங்களினை விடவும் பாதுகாப்பு மிகுந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
வியர்வை மற்றும் கண்ணீரிலும் உப்பு தன்மை காணப்படுவதால் அவற்றினையும் இம் மின்கலங்களில் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் தட்டையான எலக்ரோட்கள் இரண்டினைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதுடன் டேப் வடிவில் காணப்படும்.
எனினும் இவை எப்போது விற்பனைக்கு வரவுள்ளன என்பது உட்பட விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நெகிழ்தன்மை கொண்ட மின்கலத்தை உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்!
Reviewed by Author
on
August 17, 2017
Rating:

No comments:
Post a Comment