மன்னார் ஸ்ரார் ஈகில் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி-'சம்பியன்' பட்டத்தை தட்டி சென்ற 'தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ்' விளையாட்டுக்கழகம்-(படம்)
மன்னார் ஸ்ரார் ஈகில் (Star Eagle) விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியில் 'தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ்' விளையாட்டுக்கழகம் 'சம்பியன்' பட்டத்தை தட்டி சென்றது.
ஸ்ரார் ஈகில்(Star Eagle) விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை(25) மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி ஆரம்பமானது.
குறித்த சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.
சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகத்திற்கும்,தாழ்வுபாட்டு விளையாட்டுக்கழகத்திற்கும் போட்டி இடம் பெற்றது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சித்திவிநாயகர் அணியினர் 6 ஓவர் நிறைவில் 60 ஓட்டங்களை பெற்றனர்.
61 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய தாழ்வுபாடு சென் அன்ரனிஸ் அணியினர் 5.1 ஓவர்களில் 4 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வீரர் நிலுக்சன் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தொடர் ஆட்ட நாயகனாகவும் சித்திவிநாயகர் விளையாட்டுக்கழக வீரர் ஹிஸாம் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த பந்து வீச்சாளராக சித்திவிநாயகர் விளையாட்டு கழக வீரர் கரிபவன் தெரிவு செய்யப்பட்டார் .
வெற்றி பெற்ற விளையாட்டு கழகங்களுக்கு வெற்றிக்கேடையங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இதன் போது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்து கொண்டு வெற்றிக்கேடையத்தை வழங்கி வைத்தார்.
இதன் போது இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞா.டேவிட்சன் ஜெறாட்,மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஜே.டிக்கோனி,மன்னார் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் பி.அருள் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக்கேடையங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஸ்ரார் ஈகில் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி-'சம்பியன்' பட்டத்தை தட்டி சென்ற 'தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ்' விளையாட்டுக்கழகம்-(படம்)
Reviewed by NEWMANNAR
on
August 28, 2017
Rating:
No comments:
Post a Comment