மன்னாரில் சிறப்பாக இடம் பெற்று முடிந்த இலங்கையின் 4 ஆவது பூப்பந்தாட்டப்போட்டி-(படம்)
உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஏற்பாட்டில்,இலங்கையின் 4 ஆவது பூப்பந்தாட்டப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (25) காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையில் 4 ஆவது தடவையாக இடம் பெறும் குறித்த போட்டி மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான குறித்த போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) மாலை நிறைவடைந்தது.
இதன் போது குறித்த போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற இறுதி போட்டியினை தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கேடையம் மற்றும் பணப்பரிசில்ளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும், உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கேடையம் மற்றும் பணப்பரிசில்ளும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்று முடிந்த இலங்கையின் 4 ஆவது பூப்பந்தாட்டப்போட்டி-(படம்)
Reviewed by NEWMANNAR
on
August 28, 2017
Rating:
No comments:
Post a Comment