முருங்கன் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு....
மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவு மற்றும் வைத்திய உத்தியோகஸ்தர்களுக்கான தங்குமிடம் ஆகியவற்றை வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த சத்திர சிகிச்சைப் பிரிவு மற்றும் வைத்திய உத்தியோகஸ்தர்களுக்கான தங்குமிடம் ஆகியவை இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முருங்கன் வைத்தியசாலையினை ஒரு தள வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலைக்கு அடுத்ததாக ஒரு பிரதான தள வைத்தியசாலையாக மாற்றுவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை வடமாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முருங்கன் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு....
Reviewed by Author
on
August 04, 2017
Rating:

No comments:
Post a Comment