துணை ஆட்சியரானார் பிவி.சிந்து....
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து துணை உதவி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு பாராட்டுகள் குவிந்தன.
தெலுங்கானா அரசு ரூ.5 கோடியும், ஆந்திரா அரசு ரூ.3 கோடியும் வழங்குவதாக அறிவித்தது.
மேலும் ஆந்திரா பிவி.சிந்துவுக்கு குரூப் 1 அதிகாரி பொறுப்பான துணை ஆட்சியர் பதவி வழங்கி கௌரவித்தது.
இதனை தொடர்ந்து நேற்று கொல்லபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாட்டிற்கும், மக்களுக்கும் சேவை செய்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் பிவிசிந்து.
துணை ஆட்சியரானார் பிவி.சிந்து....
Reviewed by Author
on
August 11, 2017
Rating:

No comments:
Post a Comment